கணியன் பூங்குன்றனாரை மேற்கோள் காட்டிய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி


கணியன் பூங்குன்றனாரை மேற்கோள் காட்டிய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி
x

மதுரை விழாவில் கணியன் பூங்குன்றனாரை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மேற்கோள் காட்டி பேசினார்.

மதுரை,

மதுரை விழாவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசும்போது கூறியதாவது:-

சமூக வேறுபாடுகளை கடந்து, பரந்த மனப்பான்மையுடன், எண்ணங்களை வெளிப்படுத்தி, கற்றலுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். பாலினம், சமூகம் உள்ளிட்ட வேறுபாடுகளை கடந்து கணியன் பூங்குன்றனாரின் ''யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்ற வரிகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும்.

அதே பாடலில் ''பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே'' எனும் வரிகளின் அர்த்தம் இப்போது எனக்கு புரிகிறது. நான் பிறந்து வளர்ந்த மும்பையை தலைமையிடமாக கொண்ட மராட்டியத்துக்கும், தமிழகத்திற்கும் ஏராளமான ஒற்றுமைகள் உள்ளன. தமிழகத்தின் பழம்பெருமையை இந்த மதுரை எனக்கு உணர்த்தியுள்ளது.

மதுரை மிகவும் தனித்தன்மை வாய்ந்த கோவில் நகரம். சிறப்புமிக்க பாரம்பரியம் கொண்ட, சமூக புரிந்துணர்வு கொண்ட, பாரம்பரியத்தைக் கொண்டது மதுரை.

இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசினார்.


Next Story