45 தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள 4.0 தொழில்நுட்ப மையங்கள் - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்


45 தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள 4.0 தொழில்நுட்ப மையங்கள் - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
x

தொழிற்பயிற்சி நிலையங்களில் ஒவ்வொரு வருடமும் 5,140 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், 45 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ. 1559.25 கோடி செலவில் தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி இதனை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். இதன் மூலம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஒவ்வொரு வருடமும் 5,140 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




Next Story