நாளை நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வேலூர் வந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!


நாளை நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வேலூர் வந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
x

நாளை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் வந்தடைந்தார்.

வேலூர்,

வேலூரில் நாளை தி.மு.க பவள விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.

இதற்காக வேலூர் அடுத்த கந்தனேரியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே பிரம்மாண்ட கோட்டை வடிவிலான மேடை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. நாளை மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விழா பேரூரை ஆற்றுகிறார்.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி வேலூர் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எல்லைப் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் நாளை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் வந்தடைந்தார்.

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் அவர் காட்பாடி வந்தடைந்தார். ரெயில் நிலையத்தில் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

வேலூர் பள்ளிகொண்டாவில் நாளை நடைபெறும் முப்பெரும் விழாவில் 'மக்களுடன் ஸ்டாலின்' என்ற செயலியை அவர் வெளியிடுகிறார். மேலும் மேல்மொணவூர், இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் நடைபெறும் அரசு விழாவிலும் முதல்-அமைச்சர் பங்கேற்கிறார்.


Next Story