ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்


ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
x

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி ஜெயந்த் என்பவர் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சென்னை,

இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலை அருணாசலபிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 2 ராணுவ அதிகாரிகளும் கருகி இறந்தனர். அவர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களின் பெயர்கள் லெப்டினன்ட் வி.வி.பி.ரெட்டி மற்றும் அவரது உதவி விமானி மேஜர் ஜெயந்த் என்று தெரியவந்தது. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி ஜெயந்த் என்பவர் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

அருணாசல பிரதேச மாநிலத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், ஜெய மங்கலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் ஜெயந்த் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

ராணுவ வீரர் மேஜர் ஜெயந்த்துக்கு எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன். அவரது பிரிவால் வாடும் சக ராணுவ வீரர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நாட்டு மக்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story