வெளிநாடு பயணத்தை முடித்துவிட்டு நாளை தமிழகம் வருகிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
சென்னை,
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 23ந்தேதி 9 நாட்கள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதல் அமைச்சர் நேற்று ஜப்பானின் டோக்கியோ நகரில் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தலைவர் இஷிகுரோ நோரிஹிகோ அவர்களையும், செயல் துணைத் தலைவர் கசுயா நகஜோ அவர்களையும் மற்றும் வர்த்தக அமைப்புடன் உடன் முதல்-அமைச்சர் சந்தித்து பேசினார். மொத்தம் ரூ.818 கோடியே 90 லட்சம் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், வெளிநாடு பயணத்தை முடித்துக்கொண்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தமிழகம் வருகிறார். தமிழகம் வரவுள்ள முதல் அமைச்சருக்கு சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story