ஆஸ்கர் வென்ற நாட்டு.. நாட்டு.. பாடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!


ஆஸ்கர் வென்ற நாட்டு.. நாட்டு.. பாடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!
x

ஆஸ்கர் வென்ற நாட்டு.. நாட்டு.. பாடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் யானைகளை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படமான 'தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்' (The Elephant Whisperers) என்ற ஆவண குறுப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

மேலும் சிறந்த பாடலுக்கான விருதை டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலும் வென்றுள்ளது. இவ்விருதுகளை பெற்றவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுள்ள வாழ்த்து செய்தியில்,


"ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய மற்றும் ஆசிய பாடல் என்ற பெருமையை 'நாட்டு நாட்டு' பாடல் பெற்று வரலாறு படைத்துள்ளது. இந்த மகத்தான சாதனையை படைத்த இசையமைப்பாளர் கீரவாணி, சந்திரபோஸ், டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமவுலி, ராகுல் சிப்லிகஞ்ச், கால பைரவா, ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.


மேலும், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு வாழ்த்து செய்தியில், முதுமலை தம்பதி தொடர்பான இந்திய ஆவண குறும்படம் 'தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்' ஆஸ்கர் வென்றதற்கு வாழ்த்து. முதன்முதலில் இரண்டு பெண்கள் இந்தியாவுக்கு ஆஸ்கர் விருது பெற்றுத் தந்ததை விட சிறந்த செய்தி எதுவும் இல்லை. அனைத்து விருதுக்கும் இந்த ஆவணப்படம் தகுதியானது என்று கூறியுள்ளார்.


Next Story