இன்று சேலம் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்


இன்று சேலம் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
x

சேலம் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை,

திமுக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன்பாளையத்தில் நாளை நடக்கிறது. நாளை காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் இந்த மாநாடு துவங்குகிறது.

இந்த நிலையில் ,சேலம் இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து இன்று மாலை விமானம் மூலம் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சேலம் செல்கின்றனர். மாலை 5 மணிக்கு, சேலம் விமான நிலையம் வரும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாட்டில் 5 லட்சம் தொண்டர்கள் உட்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் பங்கு பெற உள்ளதால் சேலம் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story