தாம்பரம் மாநகராட்சி மேயர் குழந்தைக்கு 'திராவிட அரசன்' என பெயர் சூட்டிய முதல்-அமைச்சர்


தாம்பரம் மாநகராட்சி மேயர் குழந்தைக்கு திராவிட அரசன் என பெயர் சூட்டிய முதல்-அமைச்சர்
x

தாம்பரத்தில் பெண் மேயர் குழந்தைக்கு ‘திராவிட அரசன்’ என பெயர் சூட்டினார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்.

செங்கல்பட்டு

தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் இந்திய வரலாற்று பேரவை மாநாட்டின் 81-ம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் விழாவில் பங்கேற்று விட்டு மு.க.ஸ்டாலின் புறப்பட தயாரான நிலையில், மேயர் வசந்தகுமாரி பிறந்து 3 மாதங்களே ஆன தனது ஆண்குழந்தையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்து குழந்தைக்கு பெயர் வைக்க அன்பு வேண்டுகோள் விடுத்தார். குழந்தையை வாங்கி கொண்ட அவர், 'திராவிட அரசன்' என பெயர் சூட்டினார்.

முன்னதாக விழாவிற்கு வருகை தந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு குரோம்பேட்டையில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தலைமையில் மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ் உட்பட ஏராளமான தி.மு.க.வினர் திரண்டு வந்து ஒயிலாட்டம், செண்டை மேளதாளத்துடன் வரவேற்பு அளித்தனர்.

தாம்பரம் கிறிஸ்துவ கல்லூரி அருகே தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story