மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 24 Jan 2024 9:42 PM IST (Updated: 24 Jan 2024 9:48 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சென்ற கார் விபத்தில் சிக்கியதால் அவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. பர்த்வானில் இருந்து கொல்கத்தாவுக்கு சாலை வழியாக சென்று கொண்டிருக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி சென்ற கார் விபத்துக்குள்ளான செய்தி அறிந்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். காயமடைந்த அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.என தெரிவித்துள்ளார்.


Next Story