சென்னை புத்தகக் காட்சியை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


சென்னை புத்தகக் காட்சியை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 3 Jan 2024 7:20 AM IST (Updated: 3 Jan 2024 7:27 AM IST)
t-max-icont-min-icon

புத்தகக் காட்சி இன்று முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது

சென்னை,

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 47வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. புத்தகக் காட்சியை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

சென்னை புத்தகக் காட்சி வேலை நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புத்தகக் காட்சியில் சுமாா் 1,000 அரங்குகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story