சச்சின் டெண்டுல்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!


சச்சின் டெண்டுல்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!
x

சச்சின் டெண்டுல்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

கிரிக்கெட்டின் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட் லெஜண்ட் என போற்றப்படும் சச்சின் தெண்டுல்கர் இன்று தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் விளையாட்டு வீரர்கள் முக்கிய பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

"மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு 50-வது பிறந்த நாள் வாழ்த்துக்கள். தங்களுக்கு மகிழ்ச்சி, அமைதி, நல்ல ஆரோக்கியம் நிலவட்டும். மில்ல்லியன் கணக்கான இந்தியர்களை அந்தந்தத் துறைகளில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்துங்கள்." என்று பதிவிட்டுள்ளார்.Next Story