கொளத்தூர் தொகுதியில் பொங்கல் கொண்டாடிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!


கொளத்தூர் தொகுதியில் பொங்கல் கொண்டாடிய  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!
x

பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து கொளத்தூர் தொகுதி மக்களுடன் கொண்டாடினார்.

சென்னை,

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது.பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாட ஏதுவாக தமிழக அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ரூ 1,000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கலுக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ 1,000 ரொக்கம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் முதல்-அமைச்சரின் தொகுதியான கொளத்தூரில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவியாருடன் கலந்து கொண்டு தி.மு.க.நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார். பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து கொளத்தூர் தொகுதி மக்களுடன் கொண்டாடினார். மேலும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை கொளத்தூர் தொகுதியில் உள்ள 1000 பெண்களுக்கு வழங்கினார். இதில் வேட்டி, சேலை, பொங்கல் வைப்பதற்கான பொருள்கள் ஆகியவை கொடுக்கப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர்.


Next Story