காசநோய் கண்டறிய நடமாடும் மருத்துவ வாகனங்கள் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!


காசநோய் கண்டறிய நடமாடும் மருத்துவ வாகனங்கள் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!
x

காசநோய் கண்டறியும் நடமாடும் மருத்துவ வாகனங்களை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை,

'காசநோய் இல்லா தமிழ்நாடு-2025' என்ற இலக்கை எட்டும் வகையில் காசநோய் கண்டறியும் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியுடன் கூடிய நடமாடும் மருத்துவ வாகனங்கள் என்ற சிறப்பு திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

கிராமங்களில் மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் காசநோய் கண்டறியும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காசநோய் கண்டறியும் டிஜிட்டல் ஆம்புலன்ஸ் சேவைக்காக ரூ.10.65 கோடி மதிப்பிலான 23 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. சென்னை, நொச்சிக்குப்பத்தில் இந்த நடமாடும் மருத்துவ வாகனங்களை கொடியசைத்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


Next Story