நெல்லையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


நெல்லையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின்
x

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது

நெல்லை,

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவியது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் அதீத மழை பெய்தது. இந்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. தற்போது வெள்ளம் வடிந்து வருகிறது. இருப்பினும் மக்கள் பாதிப்புகளில் இருந்து மீளவில்லை. எனவே தொடர்ந்து மீட்பு பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார் . இந்த ஆய்வின்போது பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

இதனை தொடர்ந்து நெல்லையில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் . அப்போது அமைச்சர் கே.என். நேரு, சபாநாயகர் அப்பாவு , மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story