'ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி' - தமிழ்நாடு அரசின் 2 ஆண்டு சாதனை மலரை வெளியிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு அரசின் 2 ஆண்டு சாதனை மலரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
சென்னை,
தமிழக அரசு கடந்த இரன்டு ஆண்டில் திமுக ஆட்சியின் கீழ் அடைந்த சாதனைகளை விளக்கும் சாதனை மலரை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, 'ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி' என்ற தமிழக அரசின் சாதனை மலர்,செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் இன்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் வெளியிடப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர்அறிவித்த அறிவிப்புகள், உரைகள் இந்த சாதனை மலரில் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நாளை முதல் 3 நாட்கள் திமுக சார்பில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story