"திராவிட மாடல்" நிர்வாகம் குறித்த கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்


திராவிட மாடல்  நிர்வாகம் குறித்த கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
x

சமூக வலைதளங்களில் திராவிட மாடல்' நிர்வாகம் குறித்து எழும் கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

சென்னை,

திராவிடவியல் கோட்பாடுகள் - திராவிட மாடல் நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து சமூக வலைத்தளங்களிலும் உங்கள் உள்ளங்களிலும் எழும் நியாயமான கேள்விகளுக்கு #UngalilOruvanAnswers தொடரில் பதிலளிக்கிறேன்.

கேள்வி: திமுக பாஜகவோடு சமரசமாக போய்விட்டதாக சொல்கிறார்களே?

பதில்: இப்படி சொல்வதை பாஜகவே ஏற்காது

கேள்வி: நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியுமா? முடியாதா?

பதில்: முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. காலதாமதத்தால் நடக்காது என நினைக்காதீர்.

நீட் தேர்வில் மிகப்பெரிய சமூக அநீதியை பாஜக அரசு செய்து வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தல் அதற்கு பாடம் புகட்டுவதாக அமையும்.

கேள்வி: சாலைகளை எப்போது தான் சரி செய்வீர்கள்? மழைநீர் வடிகால் பணிகள் எப்போது முடியும்?

பதில்: கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யப்படவில்லை.

சென்னையை மீளூருவாக்கம் செய்யும் பணிகள் ஒரே நேரத்தில் நடப்பதால் சிரமங்கள் ஏற்படுகிறது.

மழைக்கு முன்பு வடிகா பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளேன்.

கேள்வி: ஒன்றரை ஆண்டுகால திமுக ஆட்சியின் சாதனை என்ன? சவால் என்ன?

பதில்: மக்கள் முகங்களில் காணக்கூடிய புன்னகைதான் என் சாதனை. நிதி நெருக்கடிதான் மிகப்பெரிய சவால்.

கேள்வி: நாடாளுமன்ற தேர்தல் - திமுக பங்களிப்பு என்ன?

2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் பங்களிப்பு என்னவாக இருக்கும்?

பதில்: 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பது முதல் இலக்கு.

சமூக நீதியில், கூட்டாட்சி தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட ஆட்சி அமையும் என்பது நமது இலக்கு. இதற்கான நடவடிக்கைகளை திமுக எடுக்கும்.

கேள்வி: 2-வது குறையாக திமுக தலைவராக தேர்வாகி உள்ளீர்கள், கட்சியை வழிநடத்த புதிய திட்டம் ஏதேனும் உள்ளதா?

பதில்: இனி தமிழ்நாட்டை திமுக தான் ஆளூம் என்கிற நிலை இருக்க வேண்டும். என்னிலிருந்து கடைகோடி தொண்டன் வரை இந்த லட்சியத்திற்காக உழைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story