கலைஞர் நினைவிடம் திறப்பு விழாவுக்கு வாருங்கள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு


கலைஞர் நினைவிடம் திறப்பு விழாவுக்கு வாருங்கள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 22 Feb 2024 5:36 AM GMT (Updated: 22 Feb 2024 8:01 AM GMT)

கலைஞர் நினைவிடம் வருகிற 26-ந்தேதி திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

வருகிற 26-ந்தேதி இரவு 7 மணிக்கு கலைஞர் நினைவிடம் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை கேள்வி பதில் நேரத்தில் அறிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, "கலைஞர் நினைவிடத்தில் கட்டுமான பணிகள் முடிவடைந்துவிட்டது. சிறப்பு விழாவாக கொண்டாட விரும்பவில்லை. நிகழ்ச்சியாகவே நடத்த முடிவெடுத்துள்ளோம். அண்ணா நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. வருகிற 26-ம் தேதி இரவு 7 மணிக்கு திறக்கப்படும்.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணி கட்சி, தோழமைக் கட்சி என அனைத்துக்கட்சி சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்" என்று முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.


Next Story