முதலமைச்சரின் காலை உணவு திட்டம் - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்பு!


முதலமைச்சரின் காலை உணவு திட்டம் - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்பு!
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 31 Aug 2023 9:30 AM GMT (Updated: 31 Aug 2023 9:48 AM GMT)

"காலை உணவுத் திட்டம் நல்ல திட்டம், இதில் மாற்று கருத்து கிடையாது என புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை,

புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்து கூறியதாவது;

"எப்போதும் குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் திட்டம் நல்ல திட்டம் தான். இதில் மாற்று கருத்து ஏதும் கிடையாது. புதுச்சேரியில் காலை உணவுத்திட்டத்திற்கு பதிலாக பால் கொடுக்கப்படுகிறது.

புதிய கல்விக்கொள்கையில் காலை திட்டம் இருக்கவேண்டும் என்ற கருத்து இருக்கிறது. இது புதிய கல்விக்கொள்கையில் இருக்கும் திட்டம் என்பதை நாம் பதிவுசெய்யவேண்டும். ஆனால் தமிழக அரசோ, புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றும், அதில் இருக்கும் சிலவற்றை எடுத்துக்கொள்வேன் என கூறுவதே நான் கருத்தாக சொல்கிறேன்.

குழந்தைகளுக்கு உணவு அளிப்பதை நான் வரவேற்கிறேன். பசியோடு யாரும் இருக்கக்கூடாது. ஊட்டச்சத்து குறைபாடு குழந்தைகளிடம் அதிகம் காணப்படுகின்றன. மருத்துவர் என்ற முறையில் சத்தான உணவு கொடுக்கப்படுவதை நான் வரவேற்கிறேன்." இவ்வாறு அவர் கூறினார்.


Next Story