முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா


முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா
x

எறையூர் கிராமத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா நடந்தது.

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறு சட்டமன்ற தொகுதியில் வெம்பாக்கம் மற்றும் எறையூர் கிராமத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா நடந்தது. செய்யாறு சப்-கலெக்டர் அனாமிகா தலைமை தாங்கினார்.

மாவட்ட கல்வி அலுவலர் ஜெயகாந்தம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் மாமண்டூர் டி.ராஜி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை சிற்றுண்டியை மாணவர்களுக்கு ஊட்டி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் திருவத்திபுரம் நகரமன்ற தலைவர் ஆ.மோகனவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரணிதரன், ஜெய்சங்கர், வட்டார கல்வி அலுவலர் புருஷோத்தமன், தி.மு.க. நிர்வாகிகள் லோகநாதன், சீனிவாசன், ஞானவேல் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story