காஞ்சீபுரத்தில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு


காஞ்சீபுரத்தில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு
x

காஞ்சீபுரத்தில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு கலெக்டர் தலைமையில் நடந்தது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் எடுத்துக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். மேலும் தனியார் கல்லூரி மாணவ-மாணவியர்களின் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலியில் கலெக்டர் கலந்துக் கொண்டார்.

இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், தொழிலாளர் துறை உதவி ஆணையர் சுதா, குழந்தை பாதுகாப்பு அலுவலர் சக்தி காவியா, அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டனர்.


Next Story