குழந்தை உரிமைகள் பாதுகாப்பு குறைதீர்வு முகாம்


குழந்தை உரிமைகள் பாதுகாப்பு குறைதீர்வு முகாம்
x

அரியலூர் மருத்துவக்கல்லூரியில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு குறைதீர்வு முகாம் நடைபெற்றது.

அரியலூர்

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான குறைதீர்வு முகாம் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு ஆணைய உறுப்பினர் திவ்யாகுப்தா தலைமை தாங்கினார். இதில் ஆண்டிமடம் ஒன்றியத்திற்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் புகார்கள் குறித்து குழந்தைகளிடம் விசாரித்தார். மேலும், குழந்தைகளின் பாதுகாப்பு, பள்ளி இடைநிற்றல், உடல் ரீதியான தண்டனை, ஆதரவற்ற குழந்தைகள் பாதுகாப்பு உள்பட பல்வேறு கோரிக்கை மற்றும் புகார்கள் தொடர்பான 300-க்கும் மேற்பட்ட மனுக்களை நேரடியாக பெற்று அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் பல்வேறு அதிகாரிகள், பொதுமக்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.


Next Story