பீடி தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - மத்திய தொழிலாளர் நல அதிகாரி அறிவிப்பு


பீடி தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - மத்திய தொழிலாளர் நல அதிகாரி அறிவிப்பு
x
தினத்தந்தி 22 July 2022 12:53 PM GMT (Updated: 22 July 2022 12:53 PM GMT)

பீடி தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மத்திய தொழிலாளர் நல அதிகாரி அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான மத்திய தொழிலாளர் நல ஆணையர் அருண் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல், சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகள் 2022-2023-ம் நிதி ஆண்டில் கல்வி உதவித் தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.25,000 வரை, கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 30-ந் தேதி ஆகும். மற்ற மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 31-ந் தேதி ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story