ஆர்.சி. பேட்டப்பாளையத்தில்புனித செபஸ்தியார் ஆலய தேர்த்திருவிழா


ஆர்.சி. பேட்டப்பாளையத்தில்புனித செபஸ்தியார் ஆலய தேர்த்திருவிழா
x
தினத்தந்தி 16 Feb 2023 12:30 AM IST (Updated: 16 Feb 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

மோகனூர்:

மோகனூர் அருகே ஆர்.சி.பேட்டப்பாளையத்தில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. விழாவில் பங்குதந்தை செல்வம் தலைமையில் திருப்பலி, முதல் தேர்பவனி நடந்தது. நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு சேலம் மறைமாவட்ட முதன்மை குரு மைக்கேல்ராஜா செல்வம் தலைமையில் திருவிழா திருப்பலியும், மதியம், 12 மணிக்கு ஆனந்த ரெட்டியார் பொங்கல் வைத்தலும், மாலை 6 மணிக்கு பெரிய தேர்பவனியும் நடந்தது. இந்த தேரில் புனிதர் செபஸ்தியார் எழுந்தருளினார். .

தேர் ஊர்வலம் தேர் கீழப்பேட்டப்பாளையம், புதுத்தெரு, பரமத்தி வேலூர் சாலை, சர்க்கரை ஆலை, வண்டிகேட் வழியாக சென்று ஆலயத்தில் நிறைவடைந்தது. அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மாலை அணிவித்தும் பிரார்த்தனை செய்தனர். விழாவில் நேற்று காலை 7 மணிக்கு கொடியிறக்கமும், காலை 9 மணிக்கு நன்றி திருப்பலியும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை, பங்கு மக்கள் செய்திருந்தனர்.


Next Story