செங்கல்பட்டு அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு


செங்கல்பட்டு அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
x

செங்கல்பட்டு அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு அருகே மேலமையூர் பகுதியில் நேற்று புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. மதுக்கடை திறக்கப்பட்டால் இளைஞர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் பள்ளி, கோவில்கள் அருகே மதுக்கடை திறக்க கூடாது எனக்கூறி மேலமையூர் பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு-திருக்கழுக்குன்றம் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தை நடத்தியதில் உடன்பாடு எட்டப்படாத காரணத்தினால் போராட்டம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

இதனால் திருக்கழுக்குன்றம்-செங்கல்பட்டு மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டது. செங்கல்பட்டு நகரில் இயங்கி வந்த குறிப்பிட்ட டாஸ்மாக் கடைகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், 3 மதுபான கடையை அகற்ற மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.

அதில் செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகே இயங்கி வந்த கடை ஒன்றை அடைத்து விட்டு, தற்போது மேலமையூர் பகுதியில் அக்கடை திறக்கப்பட்டததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றதாக தெரிகிறது.


Next Story