தீபாவளியை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்: பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்


தீபாவளியை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்: பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்
x

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பொதுமக்களால் பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பொதுமக்கள் அதிகமாக படையெடுத்து வருகின்றனர்

இதனால் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 30 போலீசார் 80 சுங்கச்சாவடி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் 6 பூத்துகள் வழியாக வாகனங்கள் செல்வது வழக்கம்.

தீபாவளி பண்டிகையையொட்டி 8 பூத்துகள் வழியாக வாகனங்கள் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிக அளவிலான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் வாகனங்களுக்கு கட்டணம் இல்லாமல் செல்ல மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.

நேற்றும் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி அதிகமான வாகனங்கள் பரனூர் சுங்கச்சாவடியை கடந்து சென்றது. இதனால் பரனூர் சுங்கச்சாவடியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.


Next Story