விழுப்புரத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விழுப்புரத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

விழுப்புரத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம்

விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு போக்குவரத்துக்கழக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்களை விரைந்து வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் ராஜாராம் தலைமை தாங்கினார். சம்மேளன துணைத்தலைவர் அன்பழகன், மண்டல பொதுச்செயலாளர் ரகோத்தமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் துணை பொதுச்செயலாளர்கள் ஏழுமலை, மணி, துணைத்தலைவர்கள் வேலு, தெய்வீகன், குணசேகரன், செயலாளர் தங்கபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் இணை செயலாளர் சாதிக்பாட்சா நன்றி கூறினார்.


Next Story