சி.ஐ.டி.யு. தொழிலாளர்கள் அரை நிர்வாண போராட்டம்


சி.ஐ.டி.யு. தொழிலாளர்கள் அரை நிர்வாண போராட்டம்
x

நெல்லையில் சி.ஐ.டி.யு. தொழிலாளர்கள் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

அரசு போக்குவரத்து கழகத்தில் ஊதிய ஒப்பந்தம் கேட்டு போராடிய சி.ஐ.டி.யு. தலைவர்களுக்கு ஆப்சென்ட் போட்டு சம்பளம் பிடித்ததை சரிசெய்ய வேண்டும். சீருடை மற்றும் தையல் கூலி வழங்க வேண்டும். பணிமனையில் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை வண்ணார்பேட்டை தாமிரபரணி பணிமனை முன்பு நேற்று சி.ஐ.டி.யு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர். சங்க தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாநில குழு உறுப்பினர் பெருமாள் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.Next Story