மாணவர்களின் சேர்க்கை குறைவால் மூடப்பட்டது: பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம்


மாணவர்களின் சேர்க்கை குறைவால் மூடப்பட்டது: பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம்
x

கும்மிடிப்பூண்டி அருகே மாணவர்களின் சேர்க்கை குறைவால் மூடப்பட்ட பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான பள்ளி செயல்பட்டு வந்தது. பொருளாதார நெருக்கடியாலும், மாணவர்களின் சேர்க்கை குறைவு காரணமாகவும் அந்த பள்ளி மூடப்பட உள்ளது.

இதில் படித்து வந்த மாணவ, மாணவிகள் பிற பள்ளிகளுக்கு சென்ற நிலையில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் படித்து வந்த 54 மாணவர்களுக்கு அதே சலுகை, கடைசி நேரத்தில் வேறு தனியார் பள்ளிகளில் கிடைக்குமா? என்கிற கேள்வி எழுந்து உள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் நேற்று அந்த பள்ளி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு சென்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளிகள் (பொறுப்பு) அய்யப்பன், மேற்பார்வையாளர் சலாவுதீன் ஆகியோர் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story