75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டில் தேசிய கொடி பறந்தது


75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டில் தேசிய கொடி பறந்தது
x

75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டில் தேசிய கொடி ஏற்றப்பட்டு இருந்தது.

நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின அமுத பெருவிழாவின் ஒரு பகுதியாக ஆகஸ்டு 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை வீடுகள் தோறும், அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்களில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இதனை ஏற்று நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் வீடுகளில் நேற்று தேசிய கொடி ஏற்றி சிறப்பு செய்தனர். அந்த வகையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிலும் நேற்று தேசிய கொடி ஏற்றப்பட்டு இருந்தது. இதே போன்று அமைச்சர்கள் வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு இருந்தது.


Next Story