ரூ.3 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்


ரூ.3 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
x

ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.3 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் விடப்பட்டது.

மதுரை

மதுரை மாவட்ட விற்பனைக்குழு சார்பில் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் 8 விவசாயிகளின் 42 ஆயிரத்து 312 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது. இதில் 17 வியாபாரிகள் பங்கு பெற்றனர். இந்த ஏலத்தில் அதிகபட்ச விலையாக ஒரு தேங்காய் ரூ.10.15-க்கும், குறைந்த பட்சமாக ரூ.5.50-க்கும், சராசரியாக ரூ.7.30-க்கும் ஏலம் போனது. இதனால் ரூ.3 லட்சத்து 9 ஆயிரத்து 868 தேங்காய் வர்த்தகம் நடந்தது. மேலும் 15 விவசாயிகளின் 2087 கிலோ கொப்பரை தேங்காய் ஏலம் விடப்பட்டது. இதில் 5 வியாபாரிகள் பங்கேற்று அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.80.25-க்கும், குறைந்த பட்சமாக ரூ.47.10-க்கும், சராசரியாக ரூ.63-க்கும் ஏலம் போனது. இதனால் ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 462-க்கு கொப்பரை தேங்காய் வர்த்தகம் நடந்தது. இந்த தகவலை வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மேற்பார்வையாளர் அபிநயா தெரிவித்தார்.


Related Tags :
Next Story