கோவை: நீதிமன்ற வளாகம் அருகே ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது


கோவை: நீதிமன்ற வளாகம் அருகே ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது
x

குற்றவாளிகளான 5 பேரையும் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் போலீசார் கைது செய்தனர்.

கோவை,

கோவையில் குற்ற வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு 2 பேர் வெளியே வந்தனர். அப்போது அவர்களை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது.

இந்த சம்பவத்தில் ஒருவர் சம்பவ இயத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். நீதிமன்ற வளாகம் அருகே ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளான 5 பேரையும் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

1 More update

Next Story