கோவை: ஊருக்குள் புகுந்த காட்டு யானை... பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்


கோவை: ஊருக்குள் புகுந்த காட்டு யானை... பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
x

சாலையில் யானையை பார்த்த அப்பகுதி மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

கோவை,

கோவை மாவட்டம் கணுவாய் பகுதியில் காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்தது. அந்த யானை இரவு முழுவதும் ஊருக்குள் சுற்றித்திருந்து வந்த நிலையில், காலையில், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் சாலையை கடந்து சென்றது.

காட்டு யானையை கண்ட அப்பகுதி மக்கள், அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். உடனடியாக யானை நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். காட்டு யானை ஊருக்குள் புகுந்ததால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.


Next Story