ராமேஸ்வரம் கோவிலில் ரூ.1.81 கோடி உண்டியல் காணிக்கை வசூல்


ராமேஸ்வரம் கோவிலில் ரூ.1.81 கோடி உண்டியல் காணிக்கை வசூல்
x

உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 81 லட்சம் ரூபாய் பணம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்,

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்திய பணம், நகை உள்ளிட்டவற்றை கணக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. கோவில் உண்டியலில் பெறப்பட்ட காணிக்கைகள் கோவில் மண்டபத்தில் எண்ணப்பட்டன.

இந்த பணியில் கோவில் ஊழியர்கள் மற்றும் ராமேஸ்வரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து உழவாரப் பணிகளை மேற்கொள்பவர்கள் ஈடுபட்டனர். அதன்படி உண்டியல் எண்ணப்பட்டதில் ஒரு கோடியே 81 லட்சம் ரூபாய் பணம், 90 கிராம் தங்கம் மற்றும் 3 கிலோ வெள்ளி பெறப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


1 More update

Next Story