தர்மபுரியில்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு சுற்றுலாகலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்


தர்மபுரியில்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு சுற்றுலாகலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 Oct 2023 7:00 PM GMT (Updated: 10 Oct 2023 7:01 PM GMT)

சுற்றுலாத்துறை சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவை கலெக்டர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தர்மபுரி

சுற்றுலாத்துறை சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவை கலெக்டர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு சுற்றுலா

சுற்றுலாத்துறை சார்பில் இந்தாண்டு தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா நடத்த தமிழ்நாடு அரசு அனுமதித்தது. சுற்றுலாவிற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 50 பள்ளி மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணத்தை மேற்கொள்ள அரசு ஆதிதிராவிட பழங்குடியினர் பள்ளிகள், விடுதிகள் மற்றும் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் என 50 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் சுற்றுலா செல்லும் பஸ்சை தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கலந்துரையாடினார்

இந்த ஒருநாள் சுற்றுலா பயணத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் அலுவலக செயல்முறைகள் குறித்தும், வங்கிகளில் நடைபெறும் அலுவல் செயல்முறைகள் குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் உள்ள அருங்காட்சியகங்கள், நினைவிடங்கள் மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு மாணவ, மாணவிகள் அழைத்து செல்லப்பட்டனர். முன்னதாக கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விழிப்புணர்வு சுற்றுலாவில் பங்கேற்றுள்ள மாணவ, மாணவிகளிடம் கலெக்டர் சாந்தி உரையாடி அவர்களுக்கு வடிவியல் பெட்டியை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் செய்திமக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன், பழங்குடியினர் நல அலுவலர் கண்ணன், மாவட்ட சுற்றுலா அலுவலர் கதிரேசன் உள்பட தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

---


Next Story