பொன்னேரி தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு


பொன்னேரி தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு
x

பொன்னேரி சப்-கலெக்டர், தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சப்-கலெக்டர் மற்றும் தாசில்தார் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த இரு அலுவலகங்களில் ஆண்டு தணிக்கை செய்ய திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார். அதன்படி நேற்று பொன்னேரி சப்-கலெக்டர் அலுவலகத்தில் இருந்த வரவு செலவு கோப்புகள் உட்பட பல்வேறு ஆவணங்களை கொண்டு 2022-23 ஆம் ஆண்டு தணிக்கையில் விவரங்களையும் சரிபார்த்தார்.

அப்போது பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யாராமநாதன் அலுவலக பொது மேலாளர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். இதனை தொடர்ந்து பொன்னேரி தாலுகா அலுவலகம் சென்ற கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பதிவேடுகள் வரவு செலவு பட்டா சிட்டா பதிவேடுகள் கோப்புகள் ஆண்டு தணிக்கைகளை சரி பார்த்தார்.

அப்போது சப்-கலெக்டர் ஐஸ்வர்யாராமநாதன், அலுவலக பொது மேலாளர் சீனிவாசன், தாசில்தார் செல்வகுமார் மண்டல துணை தாசில்தார்கள் மற்றும் வருவாய் அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர். பின்னர் அனைவரையும் அழைத்து சென்று அரசியல் திட்டங்கள் மக்களிடையே கொண்டு செல்வதற்கான வழிமுறைகள், பதிவேடுகள் பராமரிக்கப்படும் விதம், கோப்புகள் பராமரித்தல் பணி, அலுவலகத்திற்கு வரும் கடிதங்களுக்கு உடனுக்குடன் பதில் காலதாமதம் இல்லாமல் வழங்க ஆலோசனைகளை கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.


Next Story