ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்


ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
x

கீழையூரில் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கீழையூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் பாரதி தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் சுந்தரேசன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட துணைச்செயலாளர் காந்தி கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.1.1.2022- ந்தேதி முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படியை வழங்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு இணையான சலுகைகளை தனியார் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. முடிவில் வட்டார பொருளாளர் முருகையன் நன்றி கூறினார்.


Next Story