மூங்கில்பாடி பட்டு குளத்தை தூய்மைப்படுத்திய கலெக்டர்


மூங்கில்பாடி பட்டு குளத்தை தூய்மைப்படுத்திய கலெக்டர்
x

குன்னம் அருகே மூங்கில்பாடி பட்டு குளத்தை கலெக்டர் கற்பகம் தூய்மைப்படுத்தினார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மூங்கில்பாடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் மாவட்ட கலெக்டர் கற்பகம் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து மூங்கில்பாடி கிராமத்தில் உள்ள பட்டு குளத்தினை நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்தும் பணிகளை மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்.

அப்போது கலெக்டர் மண்வெட்டியால் குப்பைகளை வாரி தூய்மைப்படுத்தினார். இப்பணியில் இளைஞர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு குளத்தினை தூய்மைபடுத்தினர். மேலும் கழிவு நீர் வாய்க்கால் தூய்மைப்படுத்தும் பணி, அங்கன்வாடி கட்டிடம், ரேஷன் கடை, ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம ஊராட்சி சேவை மையம், சத்துணவு மையம், நூலகம், மகளிர் சுகாதார வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தூய்மைபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் கற்பகம் பார்வையிட்டார். நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, ஆர்.டி.ஓ. நிறைமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story