படிக்கட்டில் தொங்கியதை கண்டித்ததால் பஸ் டிரைவரை தாக்கிய கல்லூரி மாணவர்


படிக்கட்டில் தொங்கியதை கண்டித்ததால் பஸ் டிரைவரை தாக்கிய கல்லூரி மாணவர்
x

படிக்கட்டில் தொங்கியதை கண்டித்ததால் பஸ் டிரைவரை தாக்கிய கல்லூரி மாணவரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு

சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து அகரம்தென் நோக்கி மாநகர பஸ்(தடம் எண் 31ஏ) நேற்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் பிரதீப்குமார் என்பவர் ஓட்டினார். கேம்ப்ரோடு பஸ் நிலையத்தில் அந்த பஸ்சில் ஏறிய கல்லூரி மாணவர் ஒருவர், படிக்கட்டில் தொங்கியபடி சாலையில் கால்களை உரசியபடி பயணம் செய்தார்.

இதனை டிரைவர் பிரதீப்குமார் 2 முறை கண்டித்தும் அந்த கல்லூரி மாணவர் கேட்காமல் அதே செயலில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த டிரைவர் பிரதீப்குமார், நடுவழியிலேயே பஸ்சை நிறுத்திவிட்டு படிக்கட்டில் தொங்கியபடி வந்த கல்லூரி மாணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதில் ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவர், மாநகர பஸ் டிரைவர் பிரதீப்குமாரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்த புகாரின்பேரின் சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story