கல்லூரி மாணவி மயங்கி விழுந்து திடீர் சாவு
கல்லூரி மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தார்
தேவூர்:-
தேவூர் அருகே காவேரிப்பட்டி பனிமடைகுட்டை பகுதியை சேர்ந்தவர் உதயமூர்த்தி. இவருடைய மனைவி கேசவர்த்தினி. இவர்களுக்கு இனியாஸ்ரீ (வயது 20) என்ற மகளும், சஷ்வந்த் என்ற மகனும் இருந்தனர். இவர்களில் இனியாஸ்ரீ திருச்செங்கோடு பகுதியில் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை இனியாஸ்ரீ கல்லூரிக்கு செல்வதற்காக குளித்து விட்டு வீட்டின் மேல் மாடிக்கு சென்றார். அங்கு அந்த மாணவி திடீரென மயங்கி விழுந்தார். இதில் அவருடைய பின்னந்தலையில் அடிபட்டு மயங்கி கிடந்தார். இதையடுத்து குடும்பத்தினர் மாணவி இனியாஸ்ரீயை மீட்டு குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டா்கள் பரிசோதனை செய்ததில் வரும் வழியிலேயே மாணவி இறந்து விட்டதாக கூறியுள்ளனர். மயங்கி விழுந்த மாணவி திடீரென இறந்த சம்பவம் குறித்து தேவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.