பெரம்பூர் ரெயில் நிலைய நடைமேடையில் கத்தியை உரசியபடி சென்ற கல்லூரி மாணவர்கள் - சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்


பெரம்பூர் ரெயில் நிலைய நடைமேடையில் கத்தியை உரசியபடி சென்ற கல்லூரி மாணவர்கள் - சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
x

பெரம்பூர் ரெயில் நிலைய நடைமேடையில் கத்தியை உரசியபடி சென்ற கல்லூரி மாணவர்கள் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை

சென்னை வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் நோக்கி செல்லும் மின்சார ெரயிலில் கல்லூரி மாணவர்கள் சிலர் படிக்கட்டில் கும்பலாக தொங்கியபடி பயணம் செய்தனர். பெரம்பூர் ெரயில் நிலையத்தில் இருந்து ரெயில் மீண்டும் புறப்பட்டதும், படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர்களில் ஒருவர், கையில் இருந்த பட்டாக்கத்தியை ரெயில் பெட்டியில் தட்டியதுடன், நடைமேடையில் உரசியபடி பயணம் செய்தார். மேலும் சில மாணவர்கள் கால்களை நடைமேடையில் தேய்த்தபடி சென்றனர்.

இதனால் மின்சார ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பயணிகளை அச்சுறுத்தும்விதமாக நடந்துகொண்ட கல்லூரி மாணவர்களின் இந்த செயலை நடைமேடையில் நின்ற பயணிகளில் ஒருவர், தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார். தற்போது அந்த வீடியோ, 'வாட்ஸ்அப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த வீடியோ காட்சிகளை வைத்து, நடைமேடையில் பட்டாக்கத்தி மற்றும் கால்களை உரசியபடி ஆபத்தாக பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.


Next Story