கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம்


கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம்
x

நெல்லையில் கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் கல்லூரி ஆசிரியர் சங்கம் சார்பாக உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் தமிழக அரசு ஆணையை மீறி மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக கூறி அதை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது. இதில் ஆசிரியர் சங்க தலைவர் தேவசன், செயலாளர் சிவஞானம், பொருளாளர் கோமதிநாயகம், துணைத்தலைவர்கள் ராஜசேகர், இசக்கியம்மாள், துணைச் செயலாளர்கள் சகாயம் அந்தோணி சேவியர், உமா ஜாஸ்மின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story