ஆஸ்கார் புகழ் ரகு-பொம்மி யானைகளை பார்வையிட வாருங்கள் - சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை செயலாளர் அழைப்பு


ஆஸ்கார் புகழ் ரகு-பொம்மி யானைகளை பார்வையிட வாருங்கள் - சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை செயலாளர் அழைப்பு
x

ரகு-பொம்மி யானைகளை காண வருமாறு சுற்றுலா பயணிகளுக்கு தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை,

நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் பராமரிக்கப்படும், தாயை பிரிந்த இரண்டு யானை குட்டிகளுக்கும், அவற்றின் பராமரிப்பாளர்களுக்கும் இடையிலான பிணைப்பை சித்தரித்து எடுக்கப்பட்ட 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படம் ஆஸ்கார் விருதை வென்றது.

இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்ற ரகு-பொம்மி யானைகள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அவற்றைக் காண குழந்தைகளுடன் வருமாறு சுற்றுலா பயணிகளுக்கு தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு அழைப்பு விடுத்துள்ளார். தெப்பக்காடு யானைகள் முகாமில் ரகு-பொம்மி யானைகளுக்கு கரும்பு கொடுத்து மகிழ்ந்த அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.






Next Story