காகன்னை ஈஸ்வரர் கோவிலில் தொடர் கோமாதா பூஜை தொடக்கம்
காகன்னை ஈஸ்வரர் கோவிலில் தொடர் கோமாதா பூஜை தொடங்கியது.
பெரம்பலூர்
பெரம்பலூரை அடுத்த எளம்பலூரில் பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் உள்ள நளினாம்பிகை சமேத காகன்னை ஈஸ்வரர் கோவிலில் உலக மக்கள் நன்மைக்காகவும், பருவ மழை தவறாமல் பெய்து தனதானியம் பெருக வேண்டியும் 51 நாட்கள் தொடர் கோமாதா பூஜை நேற்று தொடங்கியது. விழாவில் மாதாஜி ரோகிணி ராஜகுமார், பிரம்மரிஷி மலை தவயோகிகள் சுந்தரமகாலிங்கம், தவசிநாதன், மாதாஜி ராதா மற்றும் இலங்கை சித்தர்கள் சபை சிவ கோபிநாத் சுவாமி, கருங்குழி வில்லிசை கலைஞர் கிஷோர்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பூஜையை நடத்தினர். பொது மக்களுக்கும், குழந்தைகளுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story