ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா


ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
x

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி அமைப்பு சார்பில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் நாதன்வேல் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சத்தியபாமா, செயலாளர் அந்தோணிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் வாசு வரவேற்றார்.

விழாவில் மாநில பொருளாளர் மாத்தேயு, ஜோதிபாபு, மாநில செயலாளர் டேவிட்ராஜன், துணைத்தலைவர் ரஞ்சன் தயாள் தாஸ் ஆகியோர் கலந்துெகாண்டு பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களை பாராட்டி பேசினர். முடிவில் வட்டார பொருளாளர் சாந்தி நன்றி கூறினார்.


Next Story