பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான நிர்வாகம் அமைப்பதற்கு குழு - உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல்


பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான நிர்வாகம் அமைப்பதற்கு குழு - உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல்
x

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான நிர்வாகம் அமைப்பதற்கு குழு அமைக்க உள்ளதாக, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான நிர்வாகம் அமைப்பதற்கு குழு அமைக்க உள்ளதாக, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்கள், பதிவாளர்கள், ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம், மாணவர்களுக்கு ஒரே தேர்வு கட்டணம் என ஒரே மாதிரியான நிர்வாகம் அமைவதற்கு விரைவில் குழு அமைக்கப்படும் என்றார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஒவ்வொரு முறை பின்பற்றப்படுவதை மாற்றி அமைத்து எல்லா பல்கலைக்கழகங்களிலும் நியமனம், தேர்வு கட்டணம் உட்பட எதுவாக இருந்தாலும் எல்லாவற்றிலும் ஒரே மாதிரியாக செயல்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக ஒரு குழுவை நியமித்து வெகு விரைவில் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் ஒரே மாதிரி நிர்வாகத்தை உருவாக்குவது குறித்து இங்கு கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு இடையே வேறுபாடு இல்லாமல் ஒரே மாதிரியான நிலைமை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த குழு நியமிக்கப்பட இருக்கிறது.

இவ்வாறு கூறினார்.

1 More update

Next Story