கவர்னருக்கு எதிராக கம்யூ., விசிக போராட்டம்.. போலீசார் குவிப்பு- திருவாரூரில் பரபரப்பு


கவர்னருக்கு எதிராக கம்யூ., விசிக போராட்டம்.. போலீசார் குவிப்பு- திருவாரூரில் பரபரப்பு
x
தினத்தந்தி 28 Jan 2024 1:36 PM GMT (Updated: 28 Jan 2024 1:49 PM GMT)

போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதி பரபரப்பானது.

திருவாரூர்,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாகப்பட்டிணம் வரவுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த அவர், அங்கிருந்து தரைவழி மார்க்கமாக நாகப்பட்டினம் சென்றார்.

இதற்கிடையில், திருவாரூருக்கு வருகை தந்த கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் ரெயில் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவலர்கள் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். எனினும், தடுப்புகளை தாண்டி போராட்டக்காரர்கள் முன்னேறியதால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.


Next Story