இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மணிப்பூர் மக்களை பிளவுபடுத்திய பா.ஜ.க.அரசை கண்டித்தும், அங்கு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் சுப்பிரமணியன், சின்னசாமி, மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலியபெருமாள், அப்பாவு வளர்மதி, கஜேந்திரன், இந்திய ஜனநாயக சங்க மாவட்ட தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் கோவிந்தராஜ், சையத்கரீம், ரீத்தா, முருகன், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story