இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காரையூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய துணைத்தலைவர் ராசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செங்கோடன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஏனாதி ராசு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் காரையூர் போலீஸ் நிலையத்தை பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் கீழ் இணைக்க வேண்டும். காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்க வேண்டும். நூறுநாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி நாள் ஒன்றுக்கு ரூ.600 கூலி வழங்கப்பட வேண்டும். 60 வயது நிரம்பிய விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் மாவட்ட துணை செயலாளர் தர்மராஜன், மாவட்ட பொருளாளர் ஜீவானந்தம், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டத்தலைவர் அரசப்பன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் சுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.