இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
x

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும், வேலையில்லா திண்டாட்டத்தை போக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் இடும்பையன் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த கட்சியினர் ஒன்று திரண்டனர். அவர்கள் கோஷங்கள் எழுப்பியபடியே தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களை கைது செய்து வேனில் அழைத்துச்சென்று தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றதாக இடும்பையன், நிர்வாகிகள் சர்புதீன், மனோன்ராஜ் உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல, செம்பனார்கோவிலில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் வீரராஜ் தலைமையில் போராட்டம் நடந்தது. இதில், கட்சியின் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள், விவசாய சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டதாக 3 பெண்கள் உள்பட 27 பேரை செம்பனார்கோவில் போலீசார் கைது செய்தனர்.






Next Story