இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

சென்னையில் மாநில துணை செயலாளர் தாக்கப்பட்டதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

மயிலாடுதுறை
சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் என்பவர் தாக்கப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் இடும்பையன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மனோன்ராஜ், நகர செயலாளர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணை செயலாளர் வீரபாண்டியனை தாக்கியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் சர்புதீன், பிரதீப், ராஜ்மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


இதேபோல சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் நீதி சோழன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட விவசாய சங்க செயலாளர் வீரராஜ், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் பிரபாகரன், கட்சி நிர்வாகிகள் ஜெயக்குமார், பாஸ்கரன், வரதராஜன், தேவகி உள்பட பலர் கலந்து கொண்டு கட்சி துணை செயலாளர் வீரபாண்டியனை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story